பொள்ளாச்சியை அடுத்து நாகையிலும் சம்பவம்

காதலிப்பதாகக் கூறி கல்லூரி மாணவிகள் ஐவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்து  காணொளி எடுத்து மிரட்டிய சம்பவம் தமிழகம் முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

பல இடங்களில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இதுபோன்று நாகையில் ஒரு சம்பவம் நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் மகன் சுந்தர் (23). இவர் அப்பகுதியில் உள்ள செல்போன் கடைக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். 

இதன்போது அங்கு வேலை செய்து வந்த பெண்ணுக்கும் இவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நாளடைவில் இது காதலாக மாற  இருவரும் சேர்ந்து காரைக்கால் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்துத் தங்கியுள்ளனர். அப்போது  குறித்த பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்த சுந்தர், பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு அதனை காணொளியாகப் பதிவு செய்திருக்கிறார்.

மயக்கம் தெளிந்து எழுந்த அந்த பெண்ணிடம், காணொளியைக் காட்டி மிரட்டியுள்ளார்.

இதனையடுத்து அப் பெண் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில், 294(B), 448, 354A, 354B ,506/2 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த பொலிஸார் சுந்தரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், கல்லூரி மாணவிகள் ஐவரைக் காதலிப்பதாகக் கூறி ஏமாற்றியிருப்பது தெரியவந்துள்ளது. 

இந்த விவகாரம் தொடர்பாக தற்போது பொலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.



Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment