பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பான விசாரணைகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்ற நிலையில் இன்னும் இந்த வழக்கில் வெளிவராத பல மர்மங்கள் மறைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். அதில் குறிப்பிடத்தக்க ஒன்று பொள்ளாச்சி பகுதியில் பல வருடங்களாக இயங்கி வந்த தனியார் மருத்துவமனை ஒன்று பொள்ளாச்சி விவகாரம் தீவரமான பின்னர் மூடப்பட்டதாகவும் அதற்கு பொறுப்பாக இருந்து பெண் வைத்தியர் தலை மறைவாகிவிட்டதாகவும் அப்பகுதி மக்கள் ஒரு புதிய கருத்தை முன்வைத்துள்ளனர்.
பொள்ளாச்சி விவகாரம் ஆரம்பித்த பின்னர் பொள்ளாச்சியில் இடம்பெற்ற மாற்றங்கள் தொடர்பில் அப்பகுதியில் உள்ள மக்களிடம் தொடர்புகொண்டு கேட்டபோது இந்த தகவலை தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் ஹரிஸ் பற்றியும் அவன் தலைமையிலான பெயிட் காங் பற்றியும் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் இதனை மறுத்து ஹரிஸ் முகப்புத்தகத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளான். அந்த வீடியோவில் தெரிவிக்கும் விடயங்களில் பல கருத்துக்கள் முரண்படுவதாகவே ஹரிஸின் முகப்புத்தக பதிவுகள் பல கூறிச்செல்கின்றது.
#PollachiAbuse #PaidGang #Thirunavukkarasu #Sabarirajan #HarishGopal #BarNagarajan #PollachiIssue #PollachiUpdates #TamilNewsKing
0 comments:
Post a Comment