கஞ்சாச் செடிகளை தோட்டத்தில் நட்டு வளர்த்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் சிராம்பியடி, பெரிஷ்டர்புர பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
புத்தளம் சிராம்பியடிப் பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாகப் புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சந்தேக நபர் தங்கியிருந்து பார்வையிடும் தென்னந் தோட்டத்தில் சுற்றிவளைப்பை மேற்கொண்ட போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடமிருந்து ஒரு தொகை கஞ்சா செடிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment