ஐநாவிடம் கையேந்தும் இலங்கை - சினக்கிறார் சுமந்திரன்!!!

சர்வதேச கண்காணிப்பை நீடிக்கச்செய்து, உலகத்துக்கு இலங்கை கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.


இதன்படி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் புதிய தீர்மானத்துக்கு இலங்கை ஆதரவளிக்க வேண்டும் என்றும் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. 2019 ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்டத்தின் மீதான இரண்டாம் நாள் விவாதம் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், 

‘ஐ.நா. 34-/ 1 தீர்மானத்துக்கமைய எழுத்து மூலமான அறிக்கை நாளை (இன்று) ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், சொந்த விவகாரங்களை தாமே கையாள்வதற்கு ஐ.நா.விடம் வேண்டுகோள் விடுக்கும் வகையில் 3 பிரதிநிதிகளை ஐ.நா. சபைக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குழப்பமான அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

உள்நாட்டு விவகாரங்களை தாமே கையாள்வதற்கு இடமளிக்கப்பட்டிருந்தது. ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படாத நிலையிலேயே சர்வதேச விசாரணைக்கு கட்டளையிடப்பட்டது. அரசின் தாமதம் எம்மை ஏமாற்றமடையச் செய்துள்ளது. காணாமல்போனோர் அலுவலகம் நியமிக்கும் பணிகளிலும் பெரிய தாமதம் நிலவியது. ஆனால், இந்தத் தாமதங்களுக்கான காரணம்கூட முன்வைக்கப்படவில்லை. ஐ.நா.வின் புதிய தீர்மானம் இலங்கை அரசால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. அந்தத் தீர்மானத்தை ஏற்று அதற்கு இணை அனுசரணை வழங்க வேண்டும். அது இலங்கையின் கடப்பாடு.
இது தொடர்பாகவும் கூட்டமைப்புக்கு எதிராக பொய் பரப்புரைகள் பரப்பப்பட்டு வருகின்றன.

அதாவது நாம் அரசுக்கு கால அவகாசம் வழங்குவதாக தெரிவிப்பது முற்றிலும் பொய்யான பரப்புரை. புதிய தீர்மானம் நிறைவேற்றப்படாவிடின் இந்த விடயங்களை சர்வதேச சமூகத்தால் கையாள முடியாது. இதனையே ஜனாதிபதி கோருகிறார். ஆனால், இதற்கு இடமளிக்காது உலகத்திற்கு இலங்கை கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றார்.


Share on Google Plus

About Thana Samugam

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment