இந்தியாவின் பீகார் மாநிலத்தில் பெண் ஒருவர் நேற்று தனது குழந்தையின் அழுகையை நிறுத்த உதட்டில் பசை ஊற்றிய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
குழந்தைகள் அழுதால், சில தாய்மார்கள் கடுப்பில், வாயில் பிளாஸ்த்ரி ஒட்டிவிடுவேன் என பயமுறுத்துவார்கள்.
ஆனால், பீகார் மாநிலத்தின் சாப்ரா பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது குழந்தையின் அழுகையை நிறுத்த உதட்டில் பசை ஊற்றியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து கூறிய குழந்தையின் தந்தை, வேலை முடிந்து இரவு வீட்டுக்கு வந்து பார்த்தபோது, என் மகனின் வாயில் இருந்து சீழ் வடிந்துள்ளது.
இதுகுறித்து மனைவியிடம் கேட்க, விடாமல், அழுது கொண்டிருந்ததால், உதட்டில் பசை தடவியதாகக் கூறினார் என்றார்.
இதில் அதிர்ச்சியடைந்த அந்த தந்தை உடனடியாக குழந்தையை மீட்டு அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளார்.
தற்போது, குழந்தை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறது.
0 comments:
Post a Comment