வவுனியா நகர்ப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுரா அபேயவிக்கிரம தலைமையில் கீழ் செயற்படும் புலனாய்வுப்பிரிவினருடன் இணைந்து போதை ஒழிப்புப்பிரிவினர் மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கையின்போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஒருவரிடமிருந்து 50 மில்லிக்கிராம் மற்றையவரிடமிருந்து 30 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா பகுதி சிறைச்சாலைக்குள் இப்போதைப் பொருளை வீசுவதற்காக இருவரும் சென்றிருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment