காலாவதியான மற்றும் மனித பயன்பாட்டுக்கு உதவாத உணவு வகைகள் மற்றும் பேக்கரி உணவுகளை விற்பனைக்கு வைத்திருந்த பல வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தலவாக்கலை லிந்துலை நகர சபைக்குட்பட்ட ஹோட்டல்கள் மற்றும் வெதுப்பகங்கள், சில்லறை வர்த்தக நிலையங்கள் போன்றவை சோதனையிடப்பட்டன.
இதன்போது பல கடைகளில் காலாவதி திகதி அச்சிடப்படாத மற்றும் பாதுகாப்பான முறையில் பொதியிடப்படாத உணவுப்பண்டங்கள் அகற்றப்பட்டு மண்ணெண்ணெய் இட்டு அழிக்கப்பட்டன.
இந்த சுற்றிவளைப்பின் போது பல கடை உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
0 comments:
Post a Comment