மன்னார் - பேசாலை கடற் பரப்பில் பீடி சுற்றும் தாள் கைவிடப்பட்டிருந்த நிலையில் கடற் படையினால் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே 323 கிலோ கிராம் பீடி சுற்றும் தாள்10 பொதிகளை கொண்டதாக மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவிலிருந்து உள்நாட்டுக்கு கொண்டுவர முயற்சித்துள்ளதாக கடற்படை சந்தேகம் வெளியிட்டுள்ளது.
இதேவேளை தொடலங்க பிரதேசத்தில் கொள்கலனில் இந்தியாவில் இருந்து உள்நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ள ஒரு கோடி 77 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியான 4 ஆயிரம் பீடி சுற்றும் தாள் நேற்றைய தினம் சுங்க பிரிவினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
0 comments:
Post a Comment