ஆசிரியர் ஒருவரினால் தாக்குதலுக்குள்ளான 18 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு பூநொச்சிமுனை பகுதியில் உள்ள காத்தான்குடி ஆதார பாடசாலை ஒன்றிலேயே இச் சம்பவம் நடந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பாடாலையில் ஐந்தாம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் மீது அந்த வகுப்பாசிரியர் கை மற்றும் தடியினால் தம்மை மிகக் கடுமையாக தாக்கியதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட 18 மாணவர்கள் காத்தான்குடி ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கைதுசெய்யப்பட்ட குறித்த ஆசிரியர் கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்பே இப் பாடசாலைக்கு கடமைக்காக வந்ததாகவும் அவர் மட்டக்களப்பைச் சேர்ந்தவர் எனவும் அவருடைய நடவடிக்கை மோசமாக காணப்பட்டதால் இடமாற்றுமாறு பல முறை அதிகாரிகளை கேட்டதாகவும் அப் பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment