தமிழர்க்கு நீதி கிடைக்கும்வரை பாடுபடுவோம் - இடித்துரைத்தார் இம்மானுவேல்

தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களுக்கு இந்த விசாரணை ஊடாக நீதி கிடைக்கவேண்டும். இது நிறைவேறும்வரை நாம் அயராது பாடுபடுவோம்.

இவ்வாறு தெரிவித்தார் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இம்மானுவேல்.

வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனுக்கும் அருட்தந்தை இம்மானுவேலுக்கும் இடையில் திடீர் சந்திப்பொன்று ஜெனிவாவில் அமைந்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நடைபெற்றது.

இலங்கை தொடர்பான விவாதம் நேற்று ஆரம்பமாவதற்கு முன்பு அருட்தந்தைக்கும்  ஆளுநருக்கும் இடையில் இந்தத் திடீர் சந்திப்பு நடைபெற்றது.

இதன்போதே ஆளுநரிடம் மேற்கண்டவாறு எடுத்துரைத்தார் அருட்தந்தை.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சார்பில் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் உள்ளிட்ட அரச குழுவினர் ஜெனிவா சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment