ஐ.பி.எல். முதலாவது ஆட்டத்தின் டிக்கெட் மூலம் கிடைக்கும் வருமானத்தை காஷ்மீரின் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த இராணுவத்தினரின் குடும்பத்துக்கு வழங்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
12 ஆவது ஐ.பி.எல். தொடர் எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
சென்னை சேப்பாக்கம், சிதம்பரம் மைதானத்தில் இரவு 8.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள முதல் போட்டியில் நடப்புச் சம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் றோயல் சேஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.
இப் போட்டிக்கான டிக்கெட்டுகள் ஒரு மணி நேரத்தில் விற்று தீர்ந்தது.
இந்த நிலையிலேயே சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் தோனி, இராணுவத்தில் கெளரவப் பொறுப்பில் உள்ளதனால், நலநிதிக்கான இந்த காசோலையை அவர் வழங்கி வைப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment