தனியார் சொகுசு பேருந்தொன்று நேற்று இரவு விபத்துக்குள்ளானதில் அறுவர் காயமடைந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்றே பரந்தன் சந்தியில் விபத்துக்குள்ளனது
முல்லைத்தீவிலிருந்து வந்த பாரவூர்தியொன்று பிரதான வீதிக்கு நுழைய முற்பட்டது.
இதன்போது, பேருந்தின் சாரதி விபத்தை தடுப்பதற்காக பேருந்தை மறுபுறத்திற்கு திருப்ப முற்பட்டார்.
இதன்போது, வீதிக்கு அருகில் இருந்த மரத்துடன் பேருந்து மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள், சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
விபத்து தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment