முன்னாள் கடற்படைத் தளபதி அத்மிரால் வசந்த கரன்னாகொட சற்று முன்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் சி.ஐ.டி.யில் ஆஜராகியுள்ளார்.
0 comments:
Post a Comment