நாடு தழுவிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.
இப் போராட்டம் எதிர்வரும் 13 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் கல்வியமைச்சுக்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை.
இதனால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அச் சங்கத்தின் உபதலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment