மீண்டு வருமா எனை நோக்கி பாயும் தோட்டா

கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம்  வெளியீட்டுக்குத் தயாராகி இருக்கும் நிலையில், படத்திற்கு மற்றுமொரு சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படம்  நீண்ட நாள்களாக கிடப்பில் உள்ளது. 2016 ஆம் ஆண்டிலேயே  படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் முழு படப்பிடிப்பும் முடிந்தது. சமீபத்தில் தணிக்கை குழு படத்திற்கு யூ/ஏ சான்றிதழும் வழங்கியது.

இதைடுத்து படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் தயாரானபோது,   சில சிக்கல்கள் ஏற்பட்டு படம்  முடங்கி விடுமோ என்ற நிலைமை ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியது. 

தயாரிப்பு தரப்பில் முந்தைய படங்களுக்கு வாங்கிய கடன்களால் இந்த படத்துக்கு பிரச்சினை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து விநியோகஸ்தர்கள் சங்கம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. 

மார்ச் 28 ஆம் திகதி படத்தை திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதில், தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷும், முக்கிய கதாபாத்திரங்களில் சசிகுமார், ராணா, வேல ராமமூர்த்தி உள்ளிட்டோரும் நடித்துள்ளார்கள். 



Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment