சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு இன்று ஏர் இந்தியா நிறுவன விமானங்களை முழுக்க முழுக்க பெண்களே இயக்க உள்ளனர்.
இதில் 12 சர்வதேச விமானங்களும், 40 க்கும் மேற்பட்ட உள்நாட்டு விமானங்களும் உள்ளடங்கும். இந்த விமானங்களில் விமானி, துணை விமானி மற்றும் பணிப்பெண்கள் என அனைத்து பிரிவிலும் பெண்களே வலம் வரவுள்ளனர்.
டில்லி - சிட்னி, மும்பை - லண்டன், டில்லி - ரோம், டில்லி-லண்டன், ;டில்லி-பாரீஸ், இடையேயான பல வழித்தடங்களில் செல்லும் விமானங்களை இந்தியப் பெண்கள் இயக்க உள்ளனர். இந்த விமானங்களில் பெரும்பாலானவற்றில் தொழில்நுட்ப பிரிவிலும் பெண் இன்ஜினியர்கள், டெக்னீசியன்கள், உதவியாளர்கள், சேவை பிரிவில் டாக்டர்கள் உள்ளிட்டோரும் பெண்களே பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை வரலாற்றிலையே முதன்முறையாக முற்றிலும் பெண் பணிக்குழாம் அடங்கிய ஸ்ரீலங்கன் விமானம் ஒன்று இன்று சிங்கப்பூர் நோக்கி பயணித்தது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. யூ.எல் 306 ரக விமானம் தற்போது சிங்கப்பூரில் தரையிறக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment