பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் 79ஆவது தேசிய தினம், இலங்கையில் கொண்டாடப்பட்டது.
இலங்கையில் அமைந்துள்ள பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் பணியகம், இலங்கைவாழ் பாகிஸ்தானியப் பிரஜைகள், பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் 79ஆவது தேசிய தினத்தை, இன்று (23) கொண்டாடினர்.
தங்களது தேசத்தை, மென்மேலும் முன்னேற்றம், வலிமை, எழுச்சிவாய்ந்த, ஜனநாயக நலன்மிக்க நாடாக உருவாக்குதற்கான உறுதியை, இதன்போது அவர்கள் மேற்கொண்டனர்.
பாகிஸ்தானிய தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது, பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓ) ஷாஹித் அஹ்மத் ஹஷ்மத்தால், பாகிஸ்தானின் தேசியக் கொடி ஏற்றிவைக்கப்பட்டது.
1940இல் நிறைவேற்றப்பட்ட லாஹீர் வரலாற்றுத் தீர்மானத்தை நினைவு கூறும்முகமாக, பாகிஸ்தானின் தேசிய தினம், மார்ச் மாதம் 23ஆம் திகதி கொண்டாடப்பட்டு வருகின்றது. உபகண்ட முஸ்லிம்களுக்கான சுதந்திரத் தேசத்தைக் கோரிய அத்தீர்மானம், இறுதியாக 1947ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி, பாகிஸ்தான் எனும் எழுச்சியான தேசம் உருவாக வழிவகுத்தது.
0 comments:
Post a Comment