மன்னார் – மணல் வீதி (4), கடற்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது, 751 கிலோகிராமுக்கும் அதிகமானளவில் நேற்று (11) ஒரு தொகை பீடி இலைகளடங்கிய பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நால்வர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த பீடி இலைகளின் பொதிகளை யாழ்ப்பாணம் சுங்க காரியாலயத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment