அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவன் பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடனைப் பற்றித் தகவல் அளிப்போருக்கு ரூ.7 கோடி பெறுமதியான பரிசு வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி பின்லேடன். அமெரிக்க சிறப்பு படையால் பாகிஸ்தானில் வைத்துச் சுட்டு கொல்லப்பட்டவர்.
பின்லேடன் மறைவுக்கு பின் அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவராகும் முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார் ஹம்சா பின்லேடன்.
கடந்த 4 வருடங்களாக ஓடியோ மற்றும் வீடியோ வழியே இயக்க உறுப்பினர்களிடம் தகவல்களை அனுப்பி, பின்லேடனை கொன்றதற்காக அமெரிக்கா மீது தாக்குதல்களை நடத்த வலியுறுத்தி வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையிலேயே ஹம்சா பின்லேடனைப் பற்றிய தகவல் அளிப்போருக்கு ரூ.7 கோடி பெறுமதியான பரிசு வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
0 comments:
Post a Comment