அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி63 படத்தின் ஷூட்டிங் நடக்கும் இடத்தில் அவரை காண விஜய் ரசிகர்கள் கூட்டம் தினமும் பெரிய அளவில் கூடிவிடுகிறது.
நேற்று அதிக ரசிகர்கள் முட்டி மோதியதால் அங்கிருந்த கம்பி வேலி சாய்ந்தது. அதை தாங்கி பிடிக்க நடிகர் விஜய்யே ஓடினார். அதே இடத்தில் இன்று ரசிகர்களை சந்தித்துள்ளார் விஜய். விஜய்யை காண மீண்டும் ரசிகர்கள் முண்டியடித்ததால் வேலி மீண்டும் சாய்ந்தது. ஆனால் அங்கிருந்தவர்கள் அதை தடுத்தனர்.
சமீபத்தில் இப்பட படப்பிடிப்பில் நயன்தாரா கலந்து கொண்டார் என கூறப்பட்டது. அவருக்கு முதல் காட்சியே திருமணம் நடப்பது போல் தானாம். அந்த காட்சிகள் ஒரு பிரபல சர்ச் ஒன்றில் நடைபெற்றுள்ளதாம்.
அட்லீ இயக்கிய ராஜா-ராணி படத்திலும் நயன்தாராவிற்கு முதல் காட்சியே சர்ச் சீன் தான்.
#Thalapathy63Updates #Vijay #Nayanthara #Thalapathy63 #Thalapathy #ShootingSpot #Thalapathy63Shoot #Thalapathy63Poojai #TamilNewsKing
0 comments:
Post a Comment