மேல் மாகாணத்தில் பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 527 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த இரண்டு தினங்களாக முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போதே மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் கீழ் இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் பல சட்டத்தரணிகள், மருத்துவர்கள் மற்றும் முன்னணி வர்த்தகர்களும் உள்டங்குகின்றர். இவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை அடுத்துவரும் சில தினங்களில் முன்னெடுக்கப்படும் என்று பொலிஸ் தலைமைக் காரியாலயம் தெரிவித்துள்ளது.
களியாட்ட நிகழ்வுகளுக்கு சென்றவர்கள் மதுபோதையுடன் வாகனங்களை செலுத்துவது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#DrunkandDrive #Police #Arrested #WesternProvince #Drink #Party #Disco #Driving #Drivers #TamilNewsKing
0 comments:
Post a Comment