500 கோடி ரூபாய் வைர கொள்ளை - மூவர் கைதாகும் சாத்தியம்!
பன்னிப்பிட்டி - எருவ்வல பகுதியில் 500 கோடி ரூபாய் பெறுமதியான நீல நிற வைரம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில், பெண் ஒருவர் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்படவுள்ளதாக காவற்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் தொடர்பில் கடந்த 5ம் திகதி கிரிபத்கொட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட கெலும் இந்திக்க என்ற கெவுமா வழங்கிய தகவலுக்கு அமைய இந்த கைது இடம்பெறவுள்ளது.
கைது செய்யப்படவுள்ளப் பெண் மொரட்டுவைப் பகுதியைச் சேர்ந்தவர்.
அத்துடன் கெவுமாவிடம் இருந்த இரண்டு துப்பாக்கிகளை தேடுவதற்காக காவற்துறையினர் விசேட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
அதேநேரம் கெவுமா கைது செய்யப்பட்டதை அடுத்து, பல்வேறு பாதாள உலக உறுப்பினர்கள் அச்சத்தில் இருப்பதாக காவற்துறை ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
மாக்கந்துரே மதூஷின் பிரதான உதவியாளரான கெவுமா, மதூஸின் பல்வேறு குற்றச் செயல்களை நடைமுறைப்படுத்தியவர் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், கெவுமா என அறியப்படும் கெலும் இந்திக்கவை 7 நாட்கள் தடுத்து விசாரணை செய்ய நீதிமன்றம் காவற்துறையினருக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இதேவேளை, கெவுமா என அறியப்படும் கெலும் இந்திக்க தற்காலிகமாக தங்கியிருந்த இரண்டு வீடுகளில் இருந்து தோட்டாக்கள் உள்ளிட்ட சில பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் காவற்துறை அத்தியட்சகர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.
தற்போது டுபாயில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலக குழு உறுப்பினர் மாகந்துரே மதூஷின் திட்டத்திற்கு அமைய இரண்டு குழுக்களை குறித்த வைர கொள்கைக்காக கெவுமா ஈடுபடுத்தியுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment