இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் கிரிக்கட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
இந்த போட்டி டர்பனில் இடம்பெறவுள்ளது.
முன்னதாக இடம்பெற்ற 2 போட்டிகளிலும் இலங்கை அணி தோல்யுற்றுள்ள நிலையில், இன்றைய போட்டியானது இலங்கை அணிக்கு முக்கியத்துவமாக அமைந்துள்ளது.
இன்றைய போட்டியில் இலங்கை அணி வெற்றிப்பெறுமானால், தொடரை வெற்றி கொள்ளும் வாய்ப்பை தக்கவைக்கும்.
மாறாக தென்னாபிரிக்கா அணி வெற்றி பெறுமானால், தென்னாபிரிக்கா அணி தொடரை கைப்பற்றி கொள்ளும்
இதேவேளை, இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4 வது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
இந்த போட்டி மும்பையில், பிற்பகல் 1.30க்கு ஆரம்பமாகவுள்ளது.
0 comments:
Post a Comment