சீனாவில் சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற பஸ் ஒன்று திடீரென தீப்பிடித்ததில் 26 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகம் தகவலை வெளியிட்டுள்ளது.
சீனாவின் ஹுனான் மாகாணம் சாங்தே நகரில் 50க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளுடன் நேற்று மாலை பஸ் ஒன்று நெடுஞ்சாலையில் வேகமாக சென்றுகொண்டிருந்தபோது பஸ்ஸின் ஒரு பகுதியில் தீப்பிடித்தது. வேகமாக சென்றதால் காற்றின் வேகம் காரணமாக, சிறிது நேரத்தில் பஸ் முழுவதும் தீப்பரவியுள்ளது.
தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து கடுமையாக போராடி தீயை அணைத்தனர். குறித்த விபத்தில் 26 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
28 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்கா அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பாக பஸின் இரு சாதரிகளையும் பொலிஸார் கைது செய்து, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
0 comments:
Post a Comment