வவுனியா சாந்தசோலை கிரராமத்தில் முதற்கட்டமாக 22 வீடுகளுக்கான அடிக்கல் இன்றையதினம் நடப்பட்டன.
தேசிய நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசாவின் பணிப்புரைக்கு அமைய மாவட்டம் தோறும் செயல்படுத்தப்படும் மாதிரிக்கிராமம் மற்றும் கொத்தணிக்கிராமங்களுக்கான நடவடிக்கையில் குறித்த கிராமத்துக்கு 70 வீடுகள் வழங்கப்பட்டன.
நிகழ்வில், கிராம அபிவிருத்திச்சங்கத் தலைவர் தேசிய வீடமைப்பு அதிகாரசபை தொழிநுட்ப உத்தியோகத்தர், நொச்சிமோட்டைக் கிராம அலுவலகர் ந. குகேந்திரன், சமுர்த்தி உத்தியோகத்தர் ஏ. ஆர். எம். லரீப், ஜக்கிய தேசியக் கட்சியின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் சிவலிங்கம், அபிவிருத்தி உத்தியோகர் நவநீதன் அருள்மொழி, ஆலய நிர்வாகசபையினர் மற்றும் கிராம மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment