இந்த வருடத்துக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் சற்று முன்னர் ஆரம்பமாகியது.
வாசிப்பு மீதான விவாதம் இன்று முதல் 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. 12 ஆம் திகதி மாலை இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.
வரவு செலவுத்திட்ட மூன்றாம் வாசிப்பு அல்லது குழுநிலை விவாதம் மார்ச் மாதம் 13 ஆம் திகதி ஆரம்பமாகும்.
இந்த விவாதம் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. அன்றைய தினம் மாலை மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெறும்.
வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது.
0 comments:
Post a Comment