15 கோடியில் கென்னடி கிளப்


சுசீந்திரன் இயக்கிய முதல் படம் வெண்ணிலா கபடி குழு. தற்போது பெண்கள் கபடியை மையமாக வைத்து அவர் உருவாக்கி வரும் படம் கென்னடி கிளப்.

பாரதிராஜா, சசிகுமார், காயத்ரி, சூரி, சின்னத்திரை நடிகை மீனாட்சி ஆகியோர் நடிக்கிறார்கள். இதுதவிர சவுந்தர்யா, நீது, சவுமியா, ஸ்மிருதி, ருத்து குமார் ஆகியோர் அறிமுகமாகிறார்கள். 

சுசீந்திரன் இயக்கிய, தயாரித்த படங்களிலேயே இதுதான் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம். அதாவது 15 கோடி ரூபாய் செலவில். தற்போது இதன் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது. 

விழுப்புரத்தில் உள் விளையாட்டு அரங்கில் இறுதிக் கட்ட படப்பிடிப்பு, நடந்து வருகிறது. இந்தியா முழுவதும் இருந்து 16 கபடி குழுக்கள் வந்துள்ளது. 

ஹரியானா, டில்லி, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, பூனே, கேரளா, ஆந்திரா, மங்களூர், போன்ற இடங்களிலிருந்து கபடி குழுக்கள் வந்துள்ளது. நிஜ வீரர்களை கொண்டே படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஏறத்தாழ 300 வீரர்கள் வந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்கள்.

படப்பிடிப்பு விழுப்புரத்தில் நடந்தாலும் வடஇந்தியாவில் நடப்பது போல் பிரத்யேகமாக படப்பிடிப்பு தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு மட்டும் ரூ.2 கோடி பட்ஜெட் ஒதுக்கியுள்ளது. 

இறுதிக்கட்டக் காட்சிகளுக்கு மட்டும் 10 நாட்களுக்கு படப்பிடிப்பு நடந்துகிறார்கள். இந்த படப்பிடிப்பு முடிந்ததும் பாடல்கள் படமாக்கப்படுகிறது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment