பேருந்துகள் இரண்டு நேருக்கு நேர் மோதியதில் 15 பேர் காயமடைந்தனர்.
பதுளை - இரத்தினபுரி பிரதான வீதியில் பெல்மடுல்ல பகுதியில் நேற்று இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
தனியார் பேருந்து ஒன்றும், சப்ரகமுவ பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்துமே இவ்வாறு விபத்திற்குள்ளானது.
விபத்தில் பல்கலைக்கழக மாணவர்களே சிறு காயங்களுக்கு உள்ளான நிலையில், பெல்மடுல்லை மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று அங்கிருந்து வெளியேறியதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment