14 ஓட்டங்களால் வெற்றி பெற்றது பஞ்சாப்

வலுவான நிலையில் ராஜஸ்தான் அணி ஆரம்பித்தாலும் இறுதியில் அடுத்தடுத்த ஆட்டமிழப்பினால் பஞ்சாப் அணி 14 ஓட்டத்தினால் வெற்றி பெற்றது.

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் நான்காவது போட்டி ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கிடையே நேற்று இரவு ஜெய்பூரில் ஆரம்பமானது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணியின் தலைவர் ரகானே முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பஞ்சாப் அணியை பணித்தார்.

முதலில் துடுப்பெடுத்தாட பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 184 ஓட்டங்களை குவித்தது.

இதையடுத்து 185 ஓட்டம் என்ற வெற்றியிலக்குடன் பதிலுக்குத் துடுப்பெடுத்தாட ராஜஸ்தான் அணி சார்பில் பட்லர் மற்றும் ரகானே ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கி அணிக்கு நல்லதொரு இணைப்பாட்டத்தை அதிரடியாக பெற்றுக் கொடுத்தனர்.

 ராஜஸ்தான் அணி 5.2 ஓவரில் 50 ஓட்டங்களை குவித்தது. ஆடுகளத்தில் பட்லர் 29 ஓட்டத்துடனும், ரகானே 21 ஓட்டத்துடனும் துடுப்பெடுத்தாடி வந்தனர். 

இதையடுத்து 6 ஆவது ஓவரை எதிர்கொண்ட ராஜஸ்தான் அணியின் பட்லர்  19 ஓட்டங்களை  விளாசித் தள்ளினார்.  

பட்லர் 7 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் ஒரு நான்கு ஓட்டத்தை விளாசித் தள்ளி மொத்தமாக 29 பந்துகளில் 7 நான்கு ஓட்டம், 3 ஆறு ஓட்டம் அடங்களாக அரைசதம் கடந்தார்.

அஷ்வின் பந்துப் பரிமாற்றம் மேற்கொள்ள அந்த ஓவரின் முதல் பந்திலேயே ரகானே 27 ஓட்டத்துடன் போல்ட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். 

இதையடுத்து ஆடுளம்  நுழைந்த சஞ்சு சாம்சன் களமிறங்கி பட்லருடன் கைகோர்த்தாட ராஜஸ்தான் அணி 10 ஓவர்களின் நிலையில் 96 ஓட்டத்தையும், 11.1 ஓவரில் 100 ஓட்டங்களையும் பெற்றது. ஆடுகளத்தில் பட்லர் 65 ஓட்டத்துடனும், சாம்சன் 8 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காது துடுப்பெடுத்தடி வந்தனர்.

எனினும் 12.5 ஆவது ஓவரில் அஷ்வினின் நுனுக்கமான செயற்பாடு காரணமாக பட்லர் 49 பந்துகளில் 10 நான்கு ஓட்டம், 2 ஆறு ஓட்டம் அடங்களாக 69 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க ஸ்டீவ் ஸ்மித் களமிறங்கினார்.

ஒரு கடத்தில் ராஜஸ்தான் அணி 15 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை இழந்து 135 ஓட்டங்களை பெற்றிருந்தது. 

ஆடுகளத்தில் சாம்சன் 19 ஓட்டத்துடனும் ஸ்டீவ் ஸ்மித் 16 ஓட்டத்துடனும் துடுப்பெடுத்தாடி வந்தனர்.  

  16 ஆவது ஓவரில் சாம் கரனின் நான்காவது பந்து வீச்சில் ஸ்டீவ் ஸ்மித் 19 ஓட்டத்துடனும் அதே ஓவரின் இறுதிப் பந்து வீச்சில் சாம்சன் 30 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்க, அடுத்தடுத்து களமிறங்கிய பென்ஸ்டோக்ஸிம் 17 ஓவரின் மூன்றாவது பந்தில் 6 ஓட்டத்துடனும், திரிபாதி 17 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் ஒரு ஓட்டத்துடனும், 18.5 ஆவது ஓவரில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 2 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் ராஜஸ்தான் அணி 163 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை பறிகொடுத்தது.

இறுதியில் ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 170 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 14 ஓட்டத்தால் தோல்வியைத் தழுவியது.

இப் போட்டியில் ராஜஸ்தான் அணியின் 7 விக்கெட்டுக்கள் 15 பந்துகளுக்கு வீழ்த்தப்பட்டமை விசேட அம்சமாகும்.

பந்து வீச்சில் பஞ்சாப் அணி சார்பில் ரஹ்மான், அன்கிட் ராஜ்பூட் மற்றும் சாம் கர்ரன் தலா 2 விக்கெட்டுக்களையும், அஷ்வின் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment