விஸ்வாசம் படத்தின் வெற்றிக்கு பின்னர் அஜித், பிங்க் படத்தின் ரீ-மேக்கான நேர்கொண்ட பார்வை படத்தில் நடிக்கிறார்.
தீரன்,சதுரங்கவேட்டை, அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய வினோத் இயக்க, ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.
வித்யாபாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடக்கிறது.
யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வருகிறார். இப்படம் அறிவிக்கப்பட்டபோதே மே 1 இல் வெளியீடு என்றே அறிவித்தார்கள்.
ஆனால், படப்பிடிப்பு ஏப்ரல் வரை தொடர்வதால், வெளியீட்டு திகதி தள்ளிப்போகலாம் என ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் இப்போது, ஆகஸ்ட் 10 ஆம் திகதி வெளியாவதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
0 comments:
Post a Comment