22 ஆண்டுகளாக டென்னிஸ் விளையாடி வரும் ரோஜர் பெடரர், சர்வதேச டென்னிஸ் போட்டியில் தனது 100 ஆவது பட்டத்தை வெற்றி கொண்டுள்ளார்.
ஆண்களுக்கான சர்வதேச டென்னிஸ் போட்டி டுபாயில் நடந்து வந்தது.
இதில் நேற்றிரவு இடம்பெற்ற இறுதி ஆட்டத்தில் உலகின் 7 ஆம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், 11 ஆம் நிலை வீரரான கிரீஸின் ஸ்டெபானோஸ் சிட்சிபாசை எதிர்கொண்டார்.
இந்த போட்டியில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ நட்சத்திரமான பெடரர் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் சிட்சிபாசை சாய்த்து சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார்.
டுபாய் சாம்பியன்ஷிப் பட்டத்தை பெடரர் வெல்வது இது 8 ஆவது முறையாகும்.
அத்துடன் 22 ஆண்டுகளாக சர்வதேச டென்னிசில் விளையாடி வரும் ரோஜர் பெடரருக்கு, ஒற்றையர் பிரிவில் இது 100 ஆவது சர்வதேச பட்டமாக அமைந்தது.
இதன் மூலம் ‘ஓபன் எரா’ வரலாற்றில் இந்த மைல்கல்லை எட்டிய 2 ஆவது வீரர் என்ற பெருமையை 37 வயதான பெடரர் பெற்றார்.
இந்த வகையில் அமெரிக்க ஜாம்பவான் ஜிம்மி கனோர்ஸ் 109 பட்டங்களுடன் முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment