மாசடைந்த முதல் 10 நகரங்கள்

உலகின் மிக மோசமாக மாசடைந்த முதல் 10 நகரங்களில் 7 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளது. 

இந்தத் தகவலை ஏர் விசுவல் மற்றும் கிரீன்பீஸ் (Air visual and Greenpeace) வெளியிட்டுள்ளது.

உலகின் மிக மோசமாக காற்று மாசடைந்த முதல் 10 நகரங்களில் 7 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளது.

அதில் முதலிடத்தில் அரியானா மாநிலத்தின் முக்கிய நகரமான குர்கிராம் உள்ளது.

கடந்த ஆண்டிலிருந்து  காற்றின் தரம் மேம்படுத்தப்பட்டபோதும், குர்கிராம்தான் முதலிடத்திலுள்ளது.

மிக மோசமாக காற்று மாசடைந்த பட்டியலில் இடம்பெறுள்ள இந்திய நகரங்கள், குர்கிராம், நொய்டா, காசியாபாத், பரிதாபாத், லக்னோ, பட்னா பிவாடி ஆகும்.

அரியானா மாநிலத்தில் மூன்று நகரங்களும், உத்தரபிரதேசத்தில் மூன்று நகரங்களும் இடம் பெற்றுள்ளன. தலைநகரம் டெல்லியை சுற்றியுள்ள அனைத்து புறநகர் (NCR) நகரங்களும் பட்டியலில் உள்ளன.

அதேபோல நமது அண்டை நாடான பாகிஸ்தானின் பைசலாபாத் நகரம் 3 ஆவது இடத்தை பிடித்துள்ளது.

மொத்தம் டாப் 10 பட்டியலில் இந்தியாவின் 7 நகரங்களும், பாகிஸ்தானின் இரண்டு நகரங்களும் சீனாவின் ஒரு நகரமும் இடம் பெற்றுள்ளன.



Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment