தனுஷ் நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் படம் மாரி 2. இதில் தனுசுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருந்தார். இந்த படத்தில் வரும் ரவுடி பேபி பாடல் இரசிகர்கள் மட்டில் பெரும் வரவேற்பை பெற்றது.
ரவுடி பேபி யூடியூபில் வெளிவந்த நாளிலிருந்து பல சாதனைகளை படைத்து வருகிறது. தற்பொழுது இந்த பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களைத் தாண்டி மிகப் பெரிய சாதனை படைத்துள்ளது. இந்தப் பாடலின் சாதனையை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா.
அதேவேளை TikTok, Musically போன்ற செயலிகளிலும் பலர் இந்தப் பாடலிற்கு நடனமாடி பதிவேற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக யாழ்ப்பாண பெண்களின் நடனம் பலரது கவனத்தையும் ஈர்த்து வருவது சிறப்பம்சம்.
0 comments:
Post a Comment