சுய தாக்குதல் கருத்துக்களுக்கு Instagramஇன் விதிகள்!

சுயதீங்கு விளைவிக்கும் கருத்துக்களை பிரதிபலிக்கும் புகைப்படங்கள் மற்றும் Graph contentகளை தனது ஆப்பிலிருந்து நீக்க இன்ஸ்டாகிராம் நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக அதன் தலைவர் அடம் மோஸ்சேரி தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் பிரட்டனை சேர்ந்த இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், இறந்த பெண்ணின் தந்தை இன்ஸ்டாகிராமில் வெளியாகும் சுயதீங்கு பற்றிய கருத்துக்களே தன் மகளை இப்படி தற்கோலை செய்ய தூண்டியது என கூறியதே இந்த திடீர் விதிமுறை மாற்றங்களுக்கு காரணம் என கூறினார்.

இது பற்றி மோஸ்செரி கூறுகையில் "சுயதீங்கு மற்றும் தற்கொலை போன்ற தவரான செயல்களின் ஆபத்துக்களை பற்றிய கருத்துக்களை நாம் யாரும் சரிவர புரிந்துகொள்வதில்லை, இதனால் பாதிப்பின் இருக்கும் நபர்களை மீட்க உதவுவது நமது கடமை" என கூறினார்.

மேலும் அவர் கூறுகையில் "இதை மாற்றும் கடமை என்னிடம் உள்ளது. இந்த நிலமையை மாற்றி, இனி இதுபோன்ற பாதிப்புக்களை ஏற்படுத்தும் contentகள் வெளிவராத நிலையை உருவாக்க வேண்டும். இதன் தொடக்கமாக, இத்துறையில் சிறந்த ஆட்களை கொண்டு இதுபோன்ற தேவையற்ற contentகளை நீக்கும் பணி நடக்கிறது" என தெரிவித்தார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த மோலி ரஸ்ஸலியின் (14 வயது) தற்கொலையை தொடர்ந்து அவரது தந்தை ஐயான் ரஸ்ஸல், மோலியின் Instagram பக்கத்தை பார்த்தபோது அதில் மனச்சோர்வு மற்றும் தற்கொலை பேன்ற தலைப்பில் சோதனை செய்ததை கண்டுபிடித்தார். இதனால் Instagram மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அதற்கு பிரிட்டன் அரசும் துணை நின்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் Instagram தளம் இதுபோன்ற தகவல்களை தனது தேடுதல் தளத்தில் இருந்து நீக்க முடிவெடுத்துள்ளது. இது குறித்து facebook நிறுவனம் கூறுகையில் "தற்கொலை மற்றும் சுய தாக்குதல் போன்ற மனதிற்கு வேதனை அளிக்கும் சம்பவங்களை  பற்றி மக்கள் பகிரலாம் ஆனால் தற்கொலையை ஊக்குவிக்க கூடாது" என தெரிவித்தது.

#Instagram #TamilNewsKing #SocialMedia #facebook #Twitter #SMO #SEO #Media
Share on Google Plus

About Thana Samugam

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment