Cocaine தொடர்புள்ள ஆளும்தரப்பு!!! : ரஞ்சன் ராமநாயக்க

கொக்கேய்ன் பயன்படுத்தும் அமைச்சர்கள் உள்ளனர் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க வழங்கிய வாக்குலம் தொடர்பான விசாரணை அறிக்கை இன்று அல்லது எதிர்வரும் திங்கட்கிழமை  பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சியினால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் தலைவரான அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல இதனைத் தெரிவித்துள்ளார். கொக்கேய்ன் பயன்படுத்தும் அமைச்சர்கள் உள்ளனர் எனத் தகவல் வெளியிட்டிருந்த இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, அது குறித்து விசாரணை மேற்கொள்ளும் குழுவில் இன்று முன்னிலையானார். அண்மையில் இடம்பெற்ற ஆளுங்கட்சியின் கூட்டத்தில் இந்தக் குழு நியமிக்கப்பட்டது.

அதில், இராஜாங்க அமைச்சர் ஹெரான் விக்ரமரட்ன நாடாளுமன்ற உறுப்பினர் ஆசூ மாரசிங்க ஜனாதிபதி சட்டத்தரணி நிஸ்ஸசங்க நாணயக்கார ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர். இந்த நிலையில், நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில ;இன்று முற்பகல் 9.30 மணியளவில் தலைவர் லக்ஸ்மன் கிரியெல்ல தலைமையில் குறித்த குழு கூடியது. எனினும் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸ்ஸங்க நாணயக்காரவுக்கு பதிலாக மற்றுமொரு சட்டத்தரணியே இன்றைய விசாரணையில் பங்கேற்றிருந்தார். அதேநேரம் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க 20 நிமிடங்கள் தாதமாகியே குறித்த குழுவில் முன்னிலையானார்.
 
இதையடுத்து அவர் சுமார் 30 நிமிடம் விசாரணைக்குழுவில் வாக்குமூலம் வழங்கியுள்ளார். இதன் பின்னர், ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, கொக்கேய்ன் பயன்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரது பெயர்களை விசாரணைக் குழுவிடம் வழங்கியதாக குறிப்பிட்டுள்ளார். இதேநேரம், குறித்த விடயம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும்; தெரிவித்துள்ளார்.

இதேவேளை இது குறித்து ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல, விசாரணை அறிக்கை இன்று அல்லது எதிர்வரும் திங்கட்கிழமை பிரதமரிடம் கையளிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த அறிக்கை பிரதமரிடம் கையளிக்கப்பட்டதன் பின்னர், எதிர்வரும் புதன்கிழமை கூடவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share on Google Plus

About Thana Samugam

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment