ஐரோப்பிய ஆணைக்குழு இலங்கையை கறுப்புப் பட்டியலிடப்பட்ட நாடுகளின் வரிசையில் உள்ளடக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிதி சலவை செய்தல் மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு நிதி வழங்குதல் ஆகியன தொடர்பில் உரிய தந்திரோபாய நடவடிக்கைகளை எடுக்காத நாடுகளின் வரிசையில் இலங்கையை ஐரோப்பிய ஆணைக்குழு உள்ளடக்கியுள்ளது. நிதி சலவை செய்தல் மற்றும் பயங்கரவாத நிதி பரிமாற்றம் தொடர்பில் செயற்படாத நாடுகளை ஐரோப்பிய ஒன்றியம் கறுப்புப் பட்டியலிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த கறுப்புப் பட்டியலில் இலங்கையின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த நாடுகளின் சட்ட திட்டங்களில் காணப்படும் பல்வேறு குறைபாடுகளினால் பயங்கரவாத நிதியிடல் நடவடிக்கைகளும் நிதி சலவை செய்யும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நாடுகள் தொடர்பில் தொடர்ச்சியாக கண்காணிப்பு செய்யப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment