வாட்ஸ்ஆப் மொபைல் அப்ளிகேஷனை கைரேகை மூலம் லாக் செய்யும் வசதி அறிமுகமாகியுள்ளது.
வாட்ஸ்ஆப் மொபைல் அப்ளிகேஷனின் ஐபோன்களுக்கான சமீபத்திய பீட்டா அப்டேட்டில் இந்த புதிய வசதி கிடைக்கிறது. பீட்டா பயனாளராக இருப்பவர்கள் 2.19.20.19 என்ற வெர்ஷன் எண் கொண்ட வாட்ஸ்ஆப் பீட்டா வெர்ஷனில் இந்த வசதியை இப்போதே பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.
இதில் ஸ்கிரீன் லாக் என்ற புதிய வசதி உள்ளது. அதனைத் தேர்வு செய்யும்போது பின், பேட்டன் போன்றவற்றுடன் கைரேகை சென்சார் மூலம் வாட்ஸ்ஆப்பை லாக் செய்யும் வசதிகள் அளிக்கப்படுகிறது.
ஐபோன் X (iPhone X) பயன்படுத்துபவர்களுக்கு கூடுதலாக முக அடையாளத்தை வைத்து லாக் செய்யும் வசதியும் இருக்கும்.
வாட்ஸ்ஆப்பை இந்த முறையில் லாக் செய்தாலும் போன் லாக் செய்திருக்கும்போது வரும் வாட்ஸ்ஆப் அழைப்புகளை லாக் எடுக்காமலே பேச முடியும். இதேபோல போன் லாக் செய்யப்பட்ட நிலையில் வரும் மெசேஜுக்கும் பதில் அளிக்க முடியும்.
இந்த வசதிகளை பயன்படுத்த முதலில் போன் செட்டிங்ஸில் கைரேகை (மற்றும் முகம்) ஆகியவற்றைப் லாக் செய்வதற்கான வழிகளாக பதிவு செய்ய வேண்டும். ஏதாவது பிரச்னையால் கைரேகை சென்சார் அல்லது முக அடையாளம் மூலம் லாக் நீக்கப்பட முடியாதபோது, பின்கோடு மூலம் திறக்கும் வசதி இருக்கிறது.
பீட்டா சோதனையில் இருக்கும் அது விரைவில் ஐபோனில் பயன்பாட்டுக்கு வரும். ஆனால், ஆண்ட்ராய்ட் மொபைல்களுக்கு இந்த வசதி எப்போது கிடைக்கும் என தகவல் இல்லை.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment