புத்தள பகுதியின் குடாஓய மகா வித்தியாலயத்தில் தரம் ஒன்பதில் கல்வி கற்று வந்த மாணவி கணித பாடத்தைமேலதிக டியூசன் வகுப்பில் கற்க சென்ற வேளையிலேயே மாணவி பாலியல் வல்லுறவிற்குற்படுத்தப்பட்டுள்ளார்.
இதையடுத்து தனக்கு நேர்ந்த விடயத்தை தனது தாயிடம் முறையிட தாய் மகளையும் கூட்டிச் சென்று புத்தள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜே.பி. பலிஹேனவிடம் புகார் செய்தனர்.
இப் புகாரின் பேரில் புத்தளைப் பொலிசார் குறிப்பிட்ட இளம் ஆசிரியரைக் கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட மாணவியினது வைத்திய அறிக்கையைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு புத்தளை அரசினர் வைத்தியசாலையில் மாணவியை அனுமதித்துள்ளனர்.
0 comments:
Post a Comment