அம்பாறை திருக்கோவில் தங்கவேலாயுதபுரம் உடும்பன்குளம் பகுதியில் 126 அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு வைகோல் சூட்டில் போடப்பட்டு தீவைத்து எரித்து படுகொலை செய்யப்பட்டனர்.
அவர்களின் ஆத்ம சாத்தி வேண்டி உறவுகளால் நேற்றைய தினம் நினைவேந்தல் கடைப்பிடிக்கப்பட்டது.
அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில், தங்கவேலாயுதபரம் மலையடிப் பிள்ளையார் கோவிலில் நிகழ்வு நடைபெற்றது.
படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக தீபங்களை எற்றி, அதனை மலையில் மேல் அமைந்துள்ள முருகன் ஆலயத்துக்கு எடுத்துச் சென்று அங்கு வைத்துப் பிரார்த்தனைகளில் ஈடுபட்டடனர்.
1986 பெப்ரவரி 19 ஆம் திகதி உடும்பன் குளம் அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
வைக்கோல் சூட்டின் மேல் போட்டு தீயிட்டு கொழுத்தி கொலை செய்ததாக சம்பவத்தை நேரில் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment