சிவன் ஆலயத்தில் உட்புகுந்த திருடர்கள் குத்துவிளக்குகளை களவாடிச் சென்றுள்ளனர்.
யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியில் நேற்றுமுன்தினம் அதிகாலை இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
ஆலயத்தின் மடப்பள்ளி மண்டபத்தின் வழியே உள்புகுந்த திருடர்கள் ஆலயத்துக்குள் இருந்த பித்தளைக் குத்து விளக்குகள் நான்கைக் களவாடிச் சென்றுள்ளனர்.
இவ்வாறு களவாடப்பட்ட குத்துவிளக்குகள் நான்கும் சுமார் 40 கிலோவுக்கு மேற்பட்டவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment