யாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீதும் பெற்றோல் குண்டுத் தாக்குதலை நடாத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது
கொக்குவில் கிழக்கு கருவேப்பிளம் வீதியிலுள்ள வீடொன்றின் மீது இன்று நண்பகளில் இத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது.
மாடிக் கட்டிடத்தைக் கொண்ட இந்த வீட்டில் பல்கலைக்கழக மாணவியும் அவரது தாயாரும் இருந்துள்ளனர். அவர்களையே பூட்டி வைத்து விட்டு விட்டின் மீது தாக்குதலை நடாத்தியுள்ளனர்.
அதே போன்று வீட்டின் மேல் மாடியில் இன்னொரு குடும்பம் இருந்த நிலையில் அந்த மாடி மீதும் பெற்றோல்க் குண்டுத் தாக்குதலை நடாத்தியுள்ளனர்.
அத்தோடு வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் மற்றும் மோட்டார் சைக்கில் மீதும் பெற்லோக் குண்டுத் தாக்குதலை நடாத்தியுள்ளனர். இதனால் அங்கிருந்த இரண்டு வாகனங்களும் முற்றாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.
மேலும் வாள்வெட்டுக் குழுவினர் வீட்டில் சில நிமிடங்கள் தங்கி நின்று வீட்டின் கண்ணாடிகளை அடித்து நொருக்கி அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வீட்டிலிருந்தவர்கள் கூக்குரலிட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அருகிலிருந்தவர்கள் ஓடி வருவதற்கு முன்பதாக தாக்குதலை மேற்கொண்ட கும்பல் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றுள்ளனர்.
இதனையடுத்து வீட்டில் பூட்டி வைக்கப்பட்டிருந்தவர்களை மீட்டதுடன் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் அறிவித்துள்ளனர்.
அத்தோடு தீயணைப்பு பிரிவினர் மற்றும் இலங்கை மின்சார சபைக்கும் அறிவித்துள்ளனர்.
இச் சம்வம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment