குடு போதை பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வன்னிமாவட்ட பிரதிபொலிஸ்மா அதிபர் அனுர அபயவிக்கிரமவின் விசேட போதை தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, தேக்கவத்தை பகுதியில் பொலிஸார் சோதனை மேற்கொண்டனர்.
அப் பகுதியிலிருந்து, 40 மில்லி கிராம் குடு போதைப் பொருளை பொலிஸார் கைப்பற்றினர்.
அதனை உடமையில் வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அதே பகுதியைச் சேர்ந்த இருவரைப் பொலிஸார் கைது செய்தனர்.
0 comments:
Post a Comment