கண்டி மற்றும் மாவனெல்லை ஆகிய முக்கிய நகரங்களை அண்மித்த பகுதிகளில் ஒரே இரவில் நான்கு இடங்களில் புத்தர் சிலைகள் அடித்துச் சேதமாக்கப்பட்ட சம்பவங்களுடன் ஆரம்பமான புத்தர் சிலை உடைப்பு விவகார விசாரணைகள், இலங்கையில் அடிப்படை வாத சிந்தனையை மையபப்டுத்தி ஆயுதக் குழுவொன்று உருவாக எத்தனிக்கின்றமை வெளிப்படுத்துகின்றது என்று குற்றப் புலனாய்வுப் பிரிவு அறிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக புத்தர் சிலை உடைப்பு விவகாரத்தில் நேரடியாக தொடர்புபட்டனர் என்று கருதப்பட்டு தேடப்பட்டு வரும் சாதிக் அப்துல்லா, சாகித் அப்துல்லா ஆகிய சகோதரர்களுக்கு மேலதிகமாக பலராலும் அறியபப்டும் மௌலவி ஒருவர் உள்ளிட்ட மேலும் பலர் அந்த விசாரணை வலயத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
இதுவரை புத்தர் சிலை உடைப்பு விவகாரத்தை மையப்படுத்தி இடம்பெற்ற விசாரணைகளில் 15 பேர் (பிரபல மௌலவி ஒருவர் உட்பட) கைது செய்யப்பட்டுள்ள நிலையிலேயே இந்த விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன
0 comments:
Post a Comment