இந்திய போர் விமானி அபிநந்தனின் பெற்றோரிடம் மக்கள் நீதி மையத் தலைவர் கமல்ஹாசன் தொலைபேசி வழியே பேசியுள்ளார்.
அவர்களிடம் அபிநந்தன் நலமுடன் இந்தியாவுக்குத் திரும்பி வருவார் என நம்பிக்கையும் தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.
காஷ்மீர் எல்லைக்குள் நேற்று நுழைந்த பாகிஸ்தான் போர் விமானங்களை இந்திய போர் விமானங்கள் விரட்டி சென்றபோது, ஒரு விமானம் பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்தது.
அதிலிருந்த சென்னையைச் சேர்ந்த விமானி அபிநந்தன் பாகிஸ்தானிடம் பிடிபட்டார்.
பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் கபூர் கூறுகையில், இந்திய போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், அதிலிருந்த விமானி தங்கள் காவலில் இருப்பதாகவும், ஜெனீவா மாநாட்டு ஒப்பந்தப்படி அவர் நடத்தப்படுவார் என்றும் கூறினார்.
0 comments:
Post a Comment