மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குளியாபிட்டிய பிரதேச பிரபல பாடசாலை ஒன்றின் அதிபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட 17 வயதான பாடசாலை மாணவி பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
பாடசாலையினுள் வைத்து இந்த துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபர் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
0 comments:
Post a Comment