சட்டவிரோதமான முறையில் தங்க பிஸ்கட்களை நாட்டிற்கு கொண்டு வந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு,கொட்டாஞ்சேனை பிரதேசத்தை சேர்ந்த 49 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நேற்று இந்தியாவின் சென்னை நகரில் இருந்து இலங்கையை வந்தடைந்தார்.
சந்தேகநபரிடமிருந்து 30 லட்சம் ரூபாய் பெறுமதியான 100 கிராம் நிறையுடைய 4 தங்க பிஸ்கட்கள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் விமான நிலைய சுங்கப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
0 comments:
Post a Comment