'தோனி', 'ஆல் இன் ஆல் அழகு ராஜா', 'கபாலி' என கோலிவுட் படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே. ஹிந்தி மற்றும் ஆங்கில படங்களிலும் நடித்து வருகிறார்.
ராதிகா ஆப்தேயின் பெற்றோர், வேலூரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் படித்து, அங்கேயே மருத்துவர்களாக பணியாற்றியவர்கள். ராதிகா ஆப்தே பிறந்த பின், அவரது குடும்பம் வேலூரில் இருந்து, புனேவுக்கு குடிபெயர்ந்தது.
சிறுவயது முதலே, புனேவில் வளர்ந்ததால், அந்த நகரின் தற்போதைய நிலை குறித்து, அங்கே ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ராதிகா ஆப்தே பேசியதாவது:
சாலை விபத்துகள் பற்றி, என் அப்பா மூலம், நான் அதிகம் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் நரம்பியல் நிபுணர். எனக்கு சாலை விதிகள் குறித்து, அதிகமாகத் தெரியும்.
ஹெல்மெட்டை பயன்படுத்துவது போன்ற அடிப்படையான விதிகளை, அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்.
ஒவ்வொருவருக்கும் இது பற்றி பாடம் நடத்த முடியாது. அவர்கள்தான் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும். முன்பு, புனே நகரை சைக்கிளிலேயே சுற்றி வருவோம். இப்போது, என்ன நிலையில் இருக்கிறது என்று பாருங்கள்.
தேவையற்ற நேரங்களில் வாகனம் ஒலி எழுப்பக் கூடாது, பாதசாரிகள் கடக்கும் கோட்டுக்கு முன், வேகத்தைக் குறைப்பது, ஹெல்மட் அணிவது போன்ற அடிப்படையான போக்குவரத்து விதிகளைக் கூட மக்கள் பின்பற்றாதது அபாயகரமானது.
0 comments:
Post a Comment