தமது பிரச்சினைகளுக்கு இன்றைய தினத்துக்குள் தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால், அத்தியாவசிய உணவுகள் மற்றும் மருந்துகளை விடுவிக்கும் பணியிலிருந்து விலகுவதாக சுங்க தொழிற்சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஒரு வாரமாகத் தொடரும் இந்தப் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் காரணமாக அத்தியாவசியமற்ற பொருள்களை விடுவிக்கும் பணிகளை இடைநிறுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சுங்கப் பணியாளர்களின் தொழிற்சங்க போராட்டத்துக்கு, மதுவரித் திணைக்களத்தின் 14 தொழிற்சங்கங்கள் இதற்கு ஆதரவு வெளியிட்டுள்ளன.
இன்று முதல் கொள்கலன் போக்குவரத்துச் சங்கத்தினருடன், பதிவாளர்கள் சங்கத்தினரும் இந்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
தொழிற்சங்க நடவடிக்கையால் தாம் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்து, புறக்கோட்டை மொத்த வியாபார நிலைய உரிமையாளர்கள் இன்றைய தினம் கடையடைப்பு போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளனர்.
சுங்கத் திணைக்கள பணிப்பாளராக இருந்த பி.எஸ்.எம். சார்ள்ஸ் பதவி நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்தப் போராட்டம் கடந்த வாரம் முதல் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment