தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் வருடந்தோறும் நடைபெறும் இளைஞர்களுக்கான வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்கான நேர்முக தேர்வு நேற்று தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
இவ் நேர்முகப்பரீட்சைக்கு மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவி பணிப்பாளர் U.L.A.majeed, மன்னார் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி P. பூலோகராஜா, தேசிய சம்மேளனத்தின் உபதலைவர் K.யசோதரன், வடமாகாண ஆங்கில கல்வி மையத்தின் ஆங்கிலக் கல்வி வளவாளர் A. அமல்ராஜ் ஆகியோரினால் நேர்முகப் பயிற்சி நடைபெற்று பி.ப 2 மணிக்கு நிறைவு செய்யப்பட்டது. இவ் நேர்முக தேர்விற்கு மன்னார் மாவட்டத்தில் பல பாகங்களிலும் இருந்து இளைஞர்கள் பங்குபற்றியுள்ளார்கள். இதில் மொத்தமாக 22 பேர் கலந்து கொண்டிருந்தனர். இதில் 5 பேர் மாத்திரமே தெரிவு செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment