எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர்கள் நெடுந்தீவு கடற்பரப்புக்கு அருகில் வைத்து நேற்றுக் கைது செய்யப்பட்டதாக, கடற்படை இணைத்தளம் தெரிவித்துள்ளது.
அவர்கள் பயன்படுத்திய இரண்டு சிறிய படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைதான மீனவர்கள் மருத்துவ பரிசோதனையின் பின்னர் யாழ்.கடற்றொழில் திணைக்கள அலுவலகத்தில் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டில் மாத்திரம் 40 க்கும் அதிகமான இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment